பெரியஊர்சேரியில் கபாடி போட்டி பாஜக மாநில துணைத் தலைவர் கே.ஜி.பாண்டியன் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் சிவா மூன்றாம் ஆண்டு நினைவாக மாநில அளவில் கபாடி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை தொழிலதிபரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு துணைத் தலைவர் மறவபட்டி கே.ஜி. பாண்டியன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து கபடி வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வருகை தந்த பாஜக மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலத் துணைத் தலைவர் கே.ஜி. பாண்டியனுக்கு கமிட்டியினர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சுற்று வட்டார கிராம மற்றும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர், வெற்றி பெற்ற அணியினருக்கு சிறப்பு பரிசுகளும் கேடயம் ரொக்கபணம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.