பெரியகுளம் அருகே பாப்பன்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் உட்பட நீரில் மூழ்கி மூவர் பலி.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் திருவிழாவிற்காக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவருடன் சபரிவாசன், மணிமாறன், ருத்ரன் மூன்று சிறுவர்களும் சேர்ந்து கண்மாய்கள் குளிக்கச் சென்றபோது நால்வரும் நீரில் மூழ்கிய நிலையில் ருத்திரன் என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மற்ற மூவர் பலியாகி உள்ளனர்.
சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பலியான இரண்டு சிறுவர்கள் மற்றும் ஆணின் உடலை கைப்பற்றி விசாரணை.
CATEGORIES தேனி
