பெரியகுளம் நகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில், தீனதயாள் உபயோத்தியாயா தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளு வண்டிகளில் பாரத பிரதமர் மோடியின் படம் பொறிக்கப்படவில்லை என்பதை கண்டித்தும்,
பொது மயானத்தில் மாற்று மதத்தினர் இடம் கேட்பதை கண்டித்தும் பாஜக மாவட்ட ஊராட்சிகள் குழு துணை தலைவர் ராஜபாண்டி தலைமையிலான பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக பெரியகுளம் நகர தலைவர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபி கண்ணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . அதனைத் தொடர்ந்து, பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், மற்றும் நகராட்சி ஆணையாளர் புனிதன் ஆகியோரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இந்த கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கலைந்து சென்றனர்.