பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – விழா.!

எம்ஜிஆர் நகர் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
சேலம் மாவட்டம் ஏற்காடு எம்ஜிஆர் நகர் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பக்தர்களுக்கு கங்கனம் கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பெரியாண்டிச்சி அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் ஊர்வலமாக ஏற்காடு சின்ன ஏரியில் இருந்து கொண்டுவரப்பட்டது.
பின்னர் ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில், விமான கோபுர கலசம் மற்றும் மூலவர்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.