BREAKING NEWS

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மனம் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மனம் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவ துறையும்,

 

ஈரோடு மாவட்ட மனநலத் திட்டமும் இணைந்து நடத்திய மனம் திட்டம் போதைப்பொருள் பயன்பாட்டின் அபாயங்கள் மற்றும் தற்கொலை எண்ணம் தடுக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

 

இக்கருத்தரங்கத்தில் அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவரும் மனநல மருத்துவரான கவிதா கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை பொருள் பயன்பாட்டில் அபாயங்கள் குறிக்கும் தற்கொலை எண்ணம் தடுக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

இந்த கருத்தரங்கத்தில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS