பெல் நிறுவன வளாகத்தில் உள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறி திருக்கூட்டம் பொன்விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிலைய ஊரக வளாகத்தில் உள்ள திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறித் திருக்கூட்டம் இயங்கி வருகிறது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருட்தந்தை அவர்களால் ஆன்மீகப் பணிகளுக்காக 1970 திருக்கூட்டத்தின் பொன்விழா நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் தவத்திரு குன்றக்குடி குருமகா சன்னிதானம் பொன்னம்பல அடிகளார், திருவண்ணாமலை ஆதீனம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வழிபாட்டு குழந்தைகள் இறைவணக்கம் பாடினார். குருமகா சன்னிதானம், பெல் நிர்வாக இயக்குனர் திரு ஸ்ரீனிவாசன் மற்றும் திருக்கூட்ட மூத்த பெண்மணிகள் குத்துவிளக்கு ஏற்ற விழா தொடங்கியது.
அருள்நெறித் திருக்கூட்ட தலைவர் முனைவர் பழனியாண்டி வரவேற்புரை ஆற்றினார். பொன்விழா மலரை வெளியிட்டு திருக்கூட்டத்தின் மூத்த உறுப்பினரான சிவத்திரு. சிங்காரவேலுவுக்கு நடேசபிள்ளை நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,
திருமுருகன் திருக்கோவிலை நிர்மாணித்து இரண்டு முறை மறு குடமுழுக்கு நடத்திய முன்னாள் தலைவர்கள் சிவத்திரு இராமதாஸ், சிவத்திரு சாமிதாஸ் சிவத்திரு பழநியப்பன் ஆகியோருக்கு அருள்நெறி செல்வர் விருதும் வழங்கி குருமகா சன்னிதானம் சிறப்புரையாற்றினார்.
தன் சிறப்புரையில் அருள்நெறி திருக்கூட்டத்தின் வரலாற்றையும் அது செய்து வரும் ஆன்மீக பணிகளையும் குறிப்பிட்டதோடு திருமுறைகள் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளையும் எடுத்து கூறினார்.
பொன்விழா நிகழ்வில் முன்னாள் இந்நாள் அருள்நெறித் திருக்கூட்ட பொறுப்பாளர்கள் மற்றும் வழிபாட்டு குழுவினர் கவுரவிக்கப்பட்டார்கள். ஆலோசகர் சிவத்திரு பழநியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பொது செயலாளர் திரு கார்த்திகேயன் நன்றியுரையாற்ற, செயலாளர் இரத்தினசபாபதி வாழ்த்துப்பா பாட விழா இனிதே நிறைவுற்றது.