பேரணாம்பட்டில் இருந்து குண்டலப் பல்லிக்கு அரசு பேருந்து மீண்டும் இயக்கம்.

பேரணாம்பட்டில் இருந்து குண்டலப்பல் லி வரை இயக்கப்பட்ட அரசு பேருந்து பஸ் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட பலரும் அவதிப்பட்டனர். இந்நிலையில், நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியாத்தம் எம்.எல்.ஏ அமலுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று பி2 அரசு டவுன் பஸ் பேரணாம்பட்டிலிருந்து குண்டலபல்லி வரை இயக்க முடிவு செய்யப்பட்டு, அதன் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு , பேரணாம்பட்டு வட்டார ஆத்மா திட்ட தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து மண்டல பொது மேலாளர் கணபதி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.அமலு, பேரணாம்பட்டு – குண்டலப்பல்லி இடையே அரசு டவுன் பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த டவுன் பஸ் காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளைகளில் இயக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், துணை மேலாளர் ( வணிகம் ) பொன்பாண்டி, துணை மேலாளர் ( இயக்கம்) மோகன், குண்டலப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் ஶ்ரீ லட்சுமி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். மேலும் பேர்ணாம்பட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் கிளை மேலாளர் கணேஷ் நன்றி கூறினார்.