BREAKING NEWS

பேரணாம்பட்டில் வீட்டு கட்டிட வேலைக்கு சென்ற இரண்டு ஆண்கள் பலி.

பேரணாம்பட்டில் வீட்டு கட்டிட வேலைக்கு சென்ற இரண்டு ஆண்கள் பலி.

 

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரவட்ல கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வெங்கடேசன். வயது 51 தந்தை பெயர். கோவிந்தசாமி இவருக்கு முதல் மனைவி பெயர் சரளா. இவர்களுக்கு இரண்டு ஆண்களும் ஒரு மகளும் உள்ளனர் இரண்டாவது மனைவி விஜயலட்சுமி இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

முதல் மனைவி சரளா காலமாகிவிட்டார். இதே பகுதியைச் சேர்ந்தவர். முருகேசன் வயது 50 இவருடைய மனைவி பெயர் சத்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளனர் இந்த இருவரும் பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி தெருவில் ஒரு வீட்டில் சென்டரிங் வேலைக்கு சென்று இருந்தனர்.

 

இந்நிலையில் மேற்கண்ட இருவரும் வேலை செய்து கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு வகையான புகை கசிந்து மூச்சு திணறி மேற்கண்ட இருவரும் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

 

இத்தகவல் அறிந்து அரவட்ல கிராம நிர்வாக அலுவலர். கே தனசேகரன் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்து கிராம நிர்வாக அலுவலர் தனசேகரனும். பேரணாம்பட்டு காவல் துறையினரும் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். இது குறித்து தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )