பேரணாம்பட்டு அடுத்த செண்டைத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த செண்டத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாம் டிஎம்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த முகாமிற்கு முன்னால் ஒன்றிய குழு பெருந்தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளருமான பொகளூர் டி பிரபாகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட அதிமுக பிரதிநிதி ஜெ இன்பரசன் செண்டத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் டி காந்தி ஒன்றிய அவைத் தலைவர் கே ஜி கோபால் மாவட்ட கழக இணை செயலாளர் எஸ் சந்திரா சேட்டு ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் இதில் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே சி வீரமணி கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மேற்கு ஒன்றிய அதிமுக இணை செயலாளர் ஜி பரிதா ஊராட்சி மன்ற தலைவர்கள் வழக்கறிஞர் ஜி டி என் பிரபாகரன் ஸ்ரீ தேவகுமார் ஜிடி கருணாகரன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்களான வசீகம் கே. ஜெகதீசன் எஸ் ஜெயந்தி சேகர் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.