பேரணாம்பட்டு எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் வேலூர்.சி.எம்.சி.கண் மருத்துவமனை வேலூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவைகள் இனணந்து இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள அஸ்ரார் பங்க்ஷன் ஹாலில் மாநில செயற்குழு உறுப்பினர் ஒள.பயாஸ், உறுப்பினர் பஷீர் அஹமத், ஆதியோர்கள் தலைமையிலும்,..
வேலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி. தலைவர். எஃப். முக்தார் அஹமத் பேரணாம்பட்டு 1வது வார்டு உறுப்பினர் ஒள அதிகுர் ரஹ்மான். உறுப்பினர்களான எம்.எம்.எஸ்.ஜாகிர் தொகுதி துணைத்தலைவர் பயாஸ் அஹமத், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். பேரணாம்பட்டு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரபாசுரன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் கண்ணுக்குள் லென்ஸ் பொருத்துவதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.