பேரணாம்பட்டு ஏரி குத்தி ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பணம் மோசடி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா ஏரி குத்தி ஊராட்சியில் புதிய முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாகவும் சமீபத்தில் நின்றுபோன பெரும்பாலான பயனாளிகளுக்கு நின்று போன உதவித் தொகைகளைப் பெற்றுத்தருவதாக கூறி பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏரி குத்திகிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் கூறுகையில் ஏரி குத்திகிராம் நிர்வாக அலுவலரான அருண்குமாரும் கிராம உதவியாளரான சின்னச்சாமியும் பயனாளிகளிடம் 5000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுகொண்டதாகவும் ஆனால் இதுவரை இப்பகுதியை சேர்ந்த முதியோர்களுக்கும் தகுதி உள்ள பயனாளிகளுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு இன்னமும் உதவித்தொகையைப் பெற்றுத்தரவில்லை என்றும் இப்பகுதி மக்கள் தரப்பிலும் லோகேஷ் தரப்பிலும் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனும் பேரணாம்பட்டு சமூக திட்ட தாசில்தாரர் வினாயகமூர்த்தியும் பேரணாம்பட்டு தாசில்தாரர் நெடுமாறனும் துணைத் தாசில்தாரர் இல. வடிவேலும் நேரில் ஆய்வுச் செய்து தவறு ஏன் என்று தெரியவரும் பட்சத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் மீதும் கிராம உதவியாளர் சின்னச்சாமியின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.