பேரணாம்பட்டு ஒன்றாவது வார்டில் சாலை வசதி தெரு மின்விளக்கு வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் ஆணையாளர் சுபாஷினி நடவடிக்கை எடுப்பாரா ?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றாவது வார்டில் தரைக்காடு பகுதியில் சாலை வசதி இல்லாமலும் தெரு மின்விளக்கு வசதி இல்லாமலும் கால்வாய் வசதி இல்லாமலும் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் ஒன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் அதிகுர் ரஹ்மான் ஒரு நாள் இவ்வழியாக வந்து கொண்டிருந்தார் அப்பொழுது அப்பகுதி பொதுமக்கள் அதிகுர் ரஹ்மானிடம் எங்கள் தெருவிற்கு சாலை வசதி இல்லை, மின்விளக்கு வசதி இல்லை, கால்வாய் வசதியும் இல்லை எங்களுக்கு முதலாவதாக தெரு மின் விளக்கை ஏற்படுத்தி தருமாறு கேட்டோம் அதற்கு அதிகுர் ரஹ்மான் இன்னும் வீடுகள் நிறைய வரட்டும் நான் மின் விளக்கை போட்டு தர ஏற்பாடு செய்கிறேன் என்று ஏனோ தானோ என்று மெத்தனமாக பதில் கூறியுள்ளார்.

மேலும் லாக் டவுன் நேரங்களில் பொது மக்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அவ்வப்போது பொதுமக்களுக்கு அரிசிகளையும் பருப்புகளையும் கொடுத்த நல்லது செய்வது போல் நடித்து நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அத்திக்கு ரகுமான் அவரது கைவரிசையை காட்டி விட்டார்.
எங்கள் ஒன்றாவது வார்டு ஒரு சில தெருக்களில் தெரு மின் விளக்குகள் இல்லாமல் இருக்கிறது கொஞ்சம் அமைத்து தாருங்கள் என்று நகராட்சி ஆணையாளரிடம் கேட்டால் அவர் மின் விளக்கு அமைக்க ஏற்பாடு செய்வார் இதை சொல்வதற்கு கூட எனக்கு உடம்பு வலிக்கிறது அதெல்லாம் என்னால் சொல்ல இயலாது என்று சகட்டுமேனிக்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

ஒரு தெரு மின் விளக்கை அமைப்பதற்கு கூட தண்ணால் முடியவில்லை என்றால் எதற்கு இவர் நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்று தெரியாமல் இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர் இனிவரும் காலங்களிலாவது ஆட்சிக்கு ரகுமானை போன்றவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு ஐந்து வருடங்களை வீணடிப்பதை விட,
அமைதியாக வீட்டிலிருந்து விடுவதே பொதுமக்களுக்கு இவர் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும் எனவே நகராட்சி ஆணையாளர் சுபாஷினி நேரடியாக இதில் தலையிட்டு தரைக்காடு பகுதியில் தெரு மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் தெரு மின்விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது தரைப்பாடு பகுதிகளில் பாம்புகளும் காட்டுப் பன்றிகளும் உலாவ கூடிய பெரிய பெரிய காடு மலைகள் தரைக்காடு பகுதியில் ஒட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
