BREAKING NEWS

பேரணாம்பட்டு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை மண் தரையில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா.

பேரணாம்பட்டு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை மண் தரையில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி கோட்டா ரோட்டில் மினா என்ற கடுக்காய் தொழிற்சாலையில் இருந்து ஒரு விதமான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.

 

இப்படியாக வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவதாகவும் விவசாயிகள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.

 

மேலும் இந்த கடுக்கா மண்டியில் ஏழைத் தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் மிகக் குறைந்த கூலியை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

 

எனவே இது குறித்து வேலூர் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் ஆம்பூர் தொழிலாளர் நலத்துறை அதிகாரி மேற்கண்ட கம்பெனி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

CATEGORIES
TAGS