பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்!

வேலூர்மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தேவகி நாராயணசாமி உடையார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி. பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
நகரமன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமத், நகராட்சி ஆணையர் வேலவன் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தினர். இதில் தாசில்தார் கே. ராஜ்குமார், சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் தேவி, துணை தாசில்தார்கள் கார்த்திக், ஜெயந்தி, ஒய். முக்தியார் அஹமத், பேரணாம்பட்டு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெ. ராஜி, ஆதிதிராவிட நல விடுதி காப்பாளர் யூ எஸ். ஆனந்தகுமார், நகராட்சி பணி மேற்பார்வையாளர் தவமணி, துப்புரவு ஆய்வாளர் உமா சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் ஒய் . ஹதிக்கூர் ரஹ்மான், எல்.சுல்தானா அப்துல் பாசித், வழக்கறிஞர் சி. அப்துல் ஹமீத், எல். சின்னலாசர். நஜீஹா ஜூபைர் அஹமத், நுரேசபா, ஹர்ஷத் அஹமத், டி. அப்துல் ஜமீல், கிராம நிர்வாக அலுவலர்கள் வடிவேலு, தனசேகரன், கிராம உதவியாளர்கள் குப்புசாமி, பாஸ்கரன், அறிவழகன், கமலாபுரம் சுரேஷ்குமார், சின்னச்சாமி, கே. சுந்தரேசன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.