பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி காஞ்சியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது நினைவிடங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் உள்ள பெரியார் தூண் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சி வரை திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதனை முன்னிட்டு திமுகவினர் அமைதி பேரணி மேற்கொண்டனர்.
அமைதி பேரணியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு வழி நடக்க அமைதியாக சென்று மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட திமுக முக்கிய பிரமுகர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.