பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை வைக்கக் கோரி பிஜேபினர் முற்றிய போராட்டம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாரத பிரதமர் மோடி அவர்களின் திருவுருவபடம் வைக்கப்பட்டு இருந்தது.
அதனை திமுக பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அப்புறப்படுத்தியுள்ளார். இதனை அறிக்கை பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பாரத பிரதமர் மோடி அவர்களின் திருவுருவபடத்தை கையில் வைத்துக் கொண்டு திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். சம்பவத்தை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர் பாதுகாப்பணிக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்களை பணியில் ஈடுபட செய்திருந்தனர்.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினருடன் காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை செய்து தாங்களே பாரத பிரதமர் படத்தை தயார் செய்து அலுவலகத்தில் இன்னும் இரண்டு தினங்களுக்குள் மாற்றி விடுகிறோம் என்று கூறியதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் கலைந்து சென்றனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் பாரத பிரதமரின் திருவுருவப்படத்தை வைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் ஒன்று கூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.