BREAKING NEWS

பேர்ணாம்பட்டு புதிய லைன் பகுதியில் உதவித்தொகை வழங்குவதில் மெத்தனம் முதியோர்கள் அவதி.

பேர்ணாம்பட்டு புதிய லைன் பகுதியில் உதவித்தொகை வழங்குவதில் மெத்தனம் முதியோர்கள் அவதி.

பேரணாம்பட்டு ஜூலை 11 பேரணாம்பட்டு புதிய லைன் தாதா தெரு கலைஞர் நகர். பகுதிகளில் விதவைகள் உடல் ஊனமுற்றோர் முதிர் கன்னிகள் முதியவர்கள் என்று பல நூற்றுக்கணக்கா ப் பயனாளிகளின் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

மேற்கண்ட பகுதிகளில் வணிக தொடர்பாளர் சாருமதி தான் உதவித்தொகைகளை வழங்கி வருகிறார் ஆனால் சாருமதி அத்திபுத்தார் போல் எப்போதாவது ஒருமுறை தான் வருவார் சாருமதி தான் கணவர் முரளி தான் மாத மாதம் பயனாளிகளுக்கு உதவித்தொகைகளை வழங்குகிறார்.

மேலும் முரளி இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு முதியோர்கள் உதவித்தொகைகளை வழங்குவதில் பல்வேறு முறை கேடுகளை செய்து வருவதாகவும் இப்படியாக ஒரு சமயம் தாதா தெருவில் முரளி உதவித்தொகைகளை கையாடல் செய்து விட்டு பொது மக்களிடம் தர்ம அடி வாங்கி வந்ததாகவும் மாதம் மாதம் உதவித்தொகைகளை வழங்குவதில் இன்று வரையிலும் முறை கேடுகளை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

முரளி செய்த தில்லுமுல்லு வேலைகளை தெரிந்து கொண்ட அப்போதைய சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் ரமேஷ் சாருமதியை கைபேசியில் தொடர்பு கொண்டு வேலை உனக்குத்தான் உனது கணவருக்கு அல்ல என்றும் இனி உதவி தொகைகளை வழங்க உனது கணவர் முரளியை உடன் அழைத்துச் செல்லக்கூடாது என்றும் எச்சரித்தார் ஆனாலும் வணிகத் தொடர்பாளர் சாருமதி மீண்டும் மீண்டும் தனது முரளியை உதவித்தொககளை வழங்கு அனுப்பி வைத்து விட்டு தான் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொள்கிறார்.

என்றும் கூறப்படுகிறது எனவே இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியனும் பேர்ணாம்பட்டு சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயக மூர்த்தி ஆகியோர்கள் வணிக தொடர்பாளர் சாருமதி மீது துறைநீதி யான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது பேரணாம்பட்டு புயலை ப் பகுதியில் தேதி11 ஆகியும் இன்னமும் இப்பகுதியில் முதியவர்கள் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )