பேர்ணாம்பட். ரெட்டி மாங்குப்பம் பகுதியில தமிழக அரசுக்கு சொந்தமான கனிமவள பகுதியில் அனுமதியின்றி முரம்பு மண் கடத்தலில் கடத்த பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர்.

பேர்ணாம்பட்டு தாலூக்கா ராஜக்கல் கல்லேரி மலை அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான கனிமவளப் பகுதியில் ரெட்டிமாங்குப்பம் பகுதியை சார்ந்த சுப்பிரமணி அவரது மகன் நந்தகுமார் ஆகியோர்கள் அதிகாரிகளின் அனுமதி இன்றி முறம்பு மண்களை எடுத்து வந்து மலைபோல் குவித்துள்ளதாகவும்,
இது குறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன்க்கு தகவல் தெரிவித்ததாகவும், அதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன் ராஜக்கல் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்ததாகவும், அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், கிராம உதவியாளர் கமலாபுரம் சுரேஷ் குமார் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முறம்பு மண் கடத்தலை தடுத்து நிறுத்தியதாகவும்,
அப்பொழுது சுப்பிரமணி அவர்களது மகன் நந்தகுமாரும் பேர்ணாம்பட்டு தாசில்தாரர் வெங்கடேசன் அனுமதி பெற்றுதான் முறிப்பு மண்ணை எடுத்து செல்கிறோம் என்று கூறியதாகவும், இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தாசில்தார் வெங்கடேசன் தொடர்பு கொண்டு சுப்பிரமணி அவர்களது மகன் நந்தகுமாருக்கு முறம்பு கடத்த அனுமதி வழங்கி உள்ளீர்களா என்று கேட்டதற்கு தாசில்தார் வெங்கடேசன் அப்படி ஏதும் அனுமதி வழங்கவில்லை என்று கூறியதாகவும்,
அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனும், கிராம உதவியாளர் கமலாபுரம் சுரேஷ்குமாரும், முறம்பு மண் கடத்திய வாகனங்களை சிறை பிடித்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.