பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் மாணவ மாணவிகள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதம் 1 ஆம் தேதி உற்சாகமாக அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும், தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.,
அதுபோல் உழவர்கள் தாங்கள் சாகுபடி செய்த புத்தரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து உறவினர்களுக்கு வழங்கி இன்புற்று மகிழ்வர், அத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நாளை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் குழந்தை இயேசு கோவில் உள்ள தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, தமிழர் பாரம்பரிய முறைப்படி மண் அடுப்பு, மண்பானை வைத்து, வாழை மரம், தென்னங்கீற்று தோரணம் கட்டி மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து, மாணவிகள் புடவை, தாவணி அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
அடுப்பில் மண் பானை வைத்து அரிசி இட்டு, சர்க்கரை, பால், திராட்சை, முந்திரி போன்றவற்றை போட்டு பொங்கல் வைத்து பால் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.
பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது, இவ்விழாவில் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.