BREAKING NEWS

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மேலையூர் பகுதியில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா. M. முருகன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி. லலிதா IAS தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,
மயிலாடுதுறை மாவட்டம் மேலையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஊனமுற்றோர் இருசக்கர வண்டிகள், தென்னங்கன்றுகள், மகளிர் திட்ட உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

 

 

இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மகளிர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS