பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி வைக்கப்பட்ட பட்டாசு கடை தீ விபத்து ஏற்படும் அபாயம்.
![பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி வைக்கப்பட்ட பட்டாசு கடை தீ விபத்து ஏற்படும் அபாயம். பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி வைக்கப்பட்ட பட்டாசு கடை தீ விபத்து ஏற்படும் அபாயம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221022-WA0060.jpg)
கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் நல்லூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெறும், சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மொத்தமாகவும் சில்லறையாகவும் வேப்பூர், நல்லூர் போன்ற பகுதிகளில் வந்து பட்டாசுகளை வாங்கி செல்வர்.
இதனிடையே பட்டாசுகளை விற்பனை செய்ய வேப்பூர் நல்லூர் பகுதிகளில் மொத்தம் ஆறு நபர்கள் உரிமம் பெற்று பட்டாசுகளை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அனுமதி பெற்ற பட்டாசு விற்பனையாளர்கள் அனுமதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும், ஆனால் இதற்கு மாறாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பட்டாசுகளை விற்பனை செய்கின்றனர்,
குறிப்பாக சேலம் மெயின் ரோட்டில் இடது புறமாக உள்ள ஒரு பட்டாசு கடையில் தீயணைப்பான், மணல் வாலி, தீ குறித்த எச்சரிக்கை பதாகை போன்றவைகள் எதுவும் வைக்காமல், பட்டாசுகளை விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டாசுகளை விற்பனை செய்யாமல் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக மக்கள் அதிகம் கூடும் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பட்டாசுகளை விற்பனை செய்வதால் எளிதில் தீ பற்றி விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் கடையை வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.