பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அஞ்சாறுவார்த்தலை விக்ரமன் ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த 5.வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தில் உள்ள பெரிய தேர்வில் கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அஞ்சாறுவார்த்தலை விக்ரமன் ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
முறையான குடிநீர் வினியோகம் எங்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் மயிலாடுதுறையில் இருந்து. அஞ்சாறுவார்த்தலை வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள விக்ரமன் ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் எங்களுக்கு சிறிய அளவிலான குடிநீர் தேக்க தொட்டி. மற்றும் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளையார் கோயில் தெரு வழியாக தான் சென்று வரவேண்டியுள்ளது.
இதனால் அங்கு சாலை வசதி செய்து தர வேண்டும்.பழுதடைந்துள்ள மின்கம்பத்தை புதியதாக மாற்றி அமைத்து தர வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் அமுதாராணி மற்றும் போலீசார் வில்லியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி செல்வராஜ் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில்,..
ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.