பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் புதூர் பகுதியில் பொதுமக்கள் 70 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயானம் உள்ளது.
இந்த மயானத்தை கைகாட்டி காமராஜபுரம் கரட்டூர் மேடு பெருமாள் கோவில் புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் மயானத்தைச் சுற்றி கம்பி அமைத்து உள்ளனர் எனவும் மயானத்தை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி தர வேண்டி அந்தியூர் வட்டாட்சியரிடம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
CATEGORIES ஈரோடு