BREAKING NEWS

பொறையாரில் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பு.

பொறையாரில் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காமராஜர் பேருந்து நிலையத்தில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட பெறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

முன்னதாக செம்பை ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல் மாலிக் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து அவருக்கு கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் அமைச்சர் பேசுகையில் உயர் கல்வியில் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை திராவிட மாடல் ஆட்சி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். போலீஸ் வேடம் போட்டுக்கொண்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அரசியலுக்கு வந்து ஏதேதோ செய்து வருவதாக கூறினார். மேலும் சமூக நீதி மற்றும் மதக் கொள்கைகள் பற்றி எதுவும் அவருக்கு தெரியாது என்றும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் ஏதேனும் உதவி கிடைக்காதா என பேசுகிறார் என்றும் விமர்சித்தார்.

இது ஒருபுறமிருக்க மற்றொரு கட்சி ஒன்று இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை என்றும் ஒபிஎஸ்சா அல்லது இபிஎஸ்சா என அங்கு போட்டி போட்டுக்கொண்டு உள்ளதாகவும் கூறினார்.

பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் பல்வேறு மாற்று கட்சியியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், சலவை பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கபட்டது.

இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், விழுப்புரம் மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி,
நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், மங்கை சங்கர், சசிகுமார், முருகப்பா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள்செல்வன், எம்.எம்.சித்திக், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )