பொறையார் கல்லூரி மாணவ மாணவிகள் குப்பைகளை சேகரித்து பேரூராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி..!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட டி.பி.எம்.எல்.கல்லூரி நிர்வாகம் நாட்டு நலப் பணித்திட்டம் மாணவ மாணவிகளால் பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் பகுதிகளில்,.
சாலையோரம் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து பேரூராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கை பேரூராட்சி
தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். தரங்கை பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், சுகாதர ஆய்வாளர் இளங்கோவன், வார்டு கவுன்சிலர் கவிதா ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 60-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் சேகரித்த குப்பைகளை பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சிக்கு வழங்கினர்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் துணிப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.