போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தஞ்சாவூரில் அதிமுக தொழிற்சங்கம் கண்டன கூட்டம்.

அதிமுக கட்சியின் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவின் சார்பில் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது.


ஆவின் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் அப்போது திமுக அரசின் பொய்யான வாக்குறுதியை கண்டித்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலனுக்காக 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்தக் கோரியும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படக் கூடிய பண பலன்களை உடனே வழங்கிட கோரியும் கண்டன உரை ஆற்றினர்.

இதில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
