போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .
தேனி மாவட்டம்: போடி அருகே உள்ளது கொண்டால் குண்டாலம்மன் ஈஸ்வரி கோயில் அருகே உள்ள முதல் பாலத்தில் வஞ்சி ஓடை ஆற்றுப்பகுதியில் நாய் ஒன்று செருப்பை தூக்கிக்கொண்டு அப்பகுதிக்குள் சுற்றி திரிந்துள்ளது.
பின் நாய்கள் மொத்தமாக சடலத்தின் அருகே மோப்பம் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்த நபர் யார் என்பது பற்றியும் இயற்கை மரணமா அல்லது கொலை செய்யப்பட்டு சடலம் தூக்கி எறியப்பட்டதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போடி நகர காவல் துறையினர் தீவிர விசாரணை போலீசார் உடலை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போடியில் கடந்த ஒரு வாரமாக ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பது அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES தேனி
TAGS அடையாளம் தெரியாத ஆண் சடலம்குண்டாலம்மன் ஈஸ்வரி கோயில்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்போடி அரசு மருத்துவமனைபோடிநாயக்கனூர்வஞ்சி ஓடை ஆற்றுப்பகுதி