போடியில் மூதாட்டி ரஞ்சிதம் என்பவரிடம் 1,49,000 ஐ ஆன்லைனில் மோசடி செய்த -3 பேரை நேற்று தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடியில் கந்தசாமி மனைவி மூதாட்டி 78 வயதுடைய ரஞ்சிதம் என்பவர், அவரது மகள் ஸ்ரீ தேவி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி மூதாட்டி ரஞ்சிதம் என்பவரின் செல்லுக்கு 70 42 81 68 70 என்ற எண்ணில் இருந்து மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, உங்கள் கணவர் எல்ஐசியில் பணம் போட்டு உள்ளார்.
அந்த பணம் முதிர்வு அடைந்து விட்டதால், அதற்கான தொகை 37 ஆயிரத்து 41 ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக நைசாக பேசி, மூதாட்டியிடம் ஐ சி ஐ சி ஐ வங்கி கணக்கு எண்ணையும், ஓ டி பி எண் மூலமாக, மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த மொத்தம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாயை 5 தவணையாக எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மூதாட்டி ரஞ்சிதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோகிரே பிரவீன் உமேஷிடம் புகார் மனு வழங்கினார்.
இதனையடுத்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் வழிகாட்டுதலின்படி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
பின்னர் இது தொடர்பாக வடமேற்கு டெல்லியைச் சேர்ந்த பித்தம்புர அருகே சகுர் பஸ்தி பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் சதாசிவம் (41), அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் மகன் முருகன்(26), ஜான் பீட்டர் மகன் வில்சன் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஆன்லைனில் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து மூன்று செல்போன்கள், ஆக்சிஸ் பேங்க் பாஸ்புக் மற்றும் ரொக்கப் பணம் ஒரு லட்சத்து 49 ஆயிரத்தை கைப்பற்றினர்.
தொடர்ந்து மூன்று பேரையும் கைது சைபர் கிரைம் போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.