BREAKING NEWS

போடி அருகே பெரியாத்து கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற 3 நபர்கள் மரணம்.

போடி அருகே பெரியாத்து கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற 3 நபர்கள் மரணம்.

போடி செய்தியாளர் : மு.பிரதீப்‌.

தேனி மாவட்டம் போடி அருகே பெரியாத்து கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற 3 நபர்கள் மரணம். காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்துள்ளனர்.

 சுப்புராஜ் நகர் புது காலனி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் 24, காவியா20, அவரது கணவர் ராஜா30 மூன்று நபர்கள் உயிரிழப்பு. பிரணவ் 12 என்ற சிறுவர் உயிர்த்தபினார்

திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் அதிகாலை பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற பொழுது ஆற்றில் தவறி விழுந்து மூவர் பலியான நிலையில் சிருவர் மட்டும் உயிர் தப்பினர் 

திருமண விருந்துக்காக தாய் மாமா வீட்டிற்கு வந்திருந்த தம்பதியினர் பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிக்க சென்ற பொழுது தவறி விழுந்து புதுமனை தம்பதியர் உட்பட மூவர் உயிர் இழப்பு.

 

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த சஞ்சய் வயது 24 முன்னாள் ராணுவ வீரரின் மகனான இவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது தாய் மாமா தேனியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது.

திருமணத்தன்று லண்டனில் இருந்த சஞ்சய் தாய்மாமா கல்யாணத்துக்கு வர முடியாத காரணத்தினால் போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக இருவரையும் அழைத்துள்ளார்.

இன்று காலை போரில் அருகாமையில் உள்ள பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக புதுமண தம்பதியரை அழைத்துச் சென்றுள்ளார் உடன் சித்தி மகன் பிரணவ் என்ற சிறுவனையும் அழைத்து சென்றுள்ளனர்.

போடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியாற்றுக் கோம்பை ஆற்றில் உள்ள பதினெட்டாம்படி கேணியில் குளிக்க நால்வரும் இறங்கிய பொழுது பாறையில் வழிக்கி நால்வரும் ஆற்றில் விழுந்துள்ளனர்.

 

 

.இதில் பலத்த காயமடைந்த நால்வரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் பிரணவ் மட்டும் கரையேறி அருகாமையில் உள்ள ஒத்தக்கடை ராமராஜிக்கு தகவல் அளித்துள்ளார்.

ராம்ராஜ் காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூவரின் உடலையும் மீட்டனர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் முடிந்த ஒரே மாதமான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )