போடி நகர திமுக சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்; 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் சேர்க்கும் நபருக்கு தங்க நாணயம்.

தமிழக முதல்வர் தமிழக ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை திமுக நிர்வாகிகள் சேர்க்க வேண்டும் என அறிவிப்பு எதிரொலியாக தேனி வடக்கு செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் தலைமையில்,
தேனி, போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி மூலமாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் இன்று போடிநாயக்கனூர்க்கு வருகை தந்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விழாவானது நடைபெற்றது.

விழாவில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி துவக்கி வைத்த தங்க தமிழ்ச்செல்வன் வார்டுகளில் புதிய உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் எந்த வார்டு செயலாளர் சேர்ப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என விழா மேடையில் தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார்.
இதனை நகரச் செயலாளர் புருஷோத்தமன் அவரது ஏற்பாட்டில் வழங்கப்படும் என அறிவித்தார் இதனை கழக நிர்வாகிகள் மகிழ்ச்சிகரமாக வரவேற்று ஆரவாரம் செய்து கைதட்டினர்.
