BREAKING NEWS

போராட்டக்காரர்களுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை..

போராட்டக்காரர்களுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை..

கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்திற்கு நீதி வேண்டி பொதுமக்கள்,மாணவர்கள், உறவினர்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. போலீசார் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனை தொடர்ந்து பேலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு “மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஆனாலும் இன்று போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )