BREAKING NEWS

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தொடங்கி வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சன்ங்கலப் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சுய தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரச்சிற்பங்கள் செய்யும் பணி பிரசித்திபெற்றதாகும். எனவே, மரச்சிற்பத்திற்கான புவிசார் குறியீடு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, உலக அளவில் நம்முடைய மரச்சிற்ப பணிகள் போற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சிறப்பு முயற்சியாகவும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக சன்ங்கலப்(SANKALP) திட்டத்தின்கீழ் மகளிர் மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, ஹஸ்தகலா எட்டிகோப்பக்கா மற்றும் எம்.ஆர்.எம்.ஆர்.எம்.கல்சுரல் பவுன்டேஷன் மூலமாக மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 2 மாதம் திறன் பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.மேலும், பெண்களின் திறமையை வெளிகொணர்வதற்காக மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க ஹஸ்தகலா எட்டிகோப்பக்கா மற்றும் எம்.ஆர்.எம்.ஆர்.எம்.கல்சுரல் பவுன்டேஷனை சேர்ந்த பத்ம ஸ்ரீ விருது பெற்ற பயிற்றுனர் ராஜு அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

 

இப்பயிற்சியில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக மரச்சிற்ப பொம்மை தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த மரச்சிற்ப பயிற்சியை மகளிர் குழுக்களில் உள்ள பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களும் இப்பயிற்சியில் இணைந்து கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்த படியே இத்தொழிலை செய்து முதலீடு ஈட்ட முடியும் என்பதால் பெண்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் சிவநடராஜன், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் சம்பத்குமார், கார்த்திகேயன், தென்கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS