BREAKING NEWS

மகாத்மா காந்திக்கு மீண்டும் சத்திய சோதனை!! மெரினாவில் இடம் மாறும் காந்தி சிலை!!

மகாத்மா காந்திக்கு மீண்டும் சத்திய சோதனை!! மெரினாவில் இடம் மாறும் காந்தி சிலை!!

மகாத்மா காந்தி சிலை

சென்னையின் அடையாளம் என்றால் மெரினா. அந்த மெரினாவுக்கே அடையாளம் என்றால் அங்கு அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைதான். தற்போது சென்னை பெருநகர மாநகராட்சியின் உத்தரவால் இனி அந்த அடையாளம் சிறிது காலத்திற்கு காணாமல் போகப்போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்காக மெரினாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை தற்காலிகமாக அங்கிருந்து அகற்ற தடையில்லா சான்றிதழை சென்னை பெருநகர மாநகராட்சி தற்போது வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாத்மா காந்தி சிலை

சென்னை பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான புதிய மெட்ரோ ரெயில் பாதை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி அங்கு அமைய உள்ள மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்திற்கான நிறுத்தத்திற்கான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளின் போது மகாத்மா காந்தி சிலை சேதம் அடைவதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து சிலை அகற்றுவதற்கான ஆய்வு மேற்கொண்டு அதற்கான அனுமதி அளிக்க  தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சிக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தடையில்லா சான்றிதழை தற்போது சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. காந்தி சிலையை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் முடியும் வரையில், மாற்று இடத்தில் வைக்க பொதுப்பணித்துறை பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக இடம் கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மெரினா கடற்கரை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையிலேயே ஒரு இடம் கண்டறிந்து அங்கு சிலையை வைக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் முழுமையாக முடிவுற்ற பின்னர், பழைய இடத்திலேயே மீண்டும் சிலை வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மெட்ரோ ரெயிலால் பலர் எதிர்காலத்தில் பயன் அடைவார்கள் என்றாலும், மெரினாவின் அடையாளமான மகாத்மா காந்தி சிலை அகற்றப்படுவது குறித்த செய்தி சத்தியசோதனையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )