மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்து கொடுக்க வேண்டி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்துக் கொடுக்க வேண்டிய வன்னிக்கோனேந்தல் பகுதியை சேர்ந்த பெண்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா வன்னிகோனந்தல் பஞ்சாயத்து மேசியாபுரம் கிராமத்தில் சுமார் 250 ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை தாரர்கள் உள்ளனர் இந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலை எங்களது பஞ்சாயத்து அளவில் நடைபெறுவதால் சுமார் 5 கிலோமீட்டர் அளவிற்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது எங்களது குழந்தைகள் மற்றும் முதியவர்களை இதனால் சரிவர கவனிக்க இயலவில்லை அதனால் எங்களது ஊர்மக்களுக்கு எங்களது ஊரிலேயே பணி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக் கொள்வதாக கூறினர்.
CATEGORIES Uncategorized
