BREAKING NEWS

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா?! உத்தவ் தாக்கரே ராஜினாமா.

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா?! உத்தவ் தாக்கரே ராஜினாமா.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்று  அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அண்மையில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது.

அதில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களையும், சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா ஓரிடத்தையும் கைப்பற்றின. பாஜகவுக்கு இரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனை வேட்பாளரைத் தோற்கடித்து பாஜக கூடுதலாக ஓரிடத்தைக் கைப்பற்றியது.

அதேபோல், மாநில சட்டமேலவைத் தேர்தலிலும் பாஜக 4 இடத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஓரிடத்தைக் கைப்பற்றியது. அதனால், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் ஒத்துழைப்பு காணப்படவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டினர். தேர்தலின்போது சிவசேனையை சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், சிவ சேனா கட்சியின் 20 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அந்தக் கட்சியின் மூத்த தலைவரும்  அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவுடன் குஜராத்தில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து இன்று 40 எம்.எல்.ஏக்களுடன் அசாம் மாநிலத்தில் இருக்கும் கவுகாத்தியில்  தஞ்சம் அடைந்து இருப்பதாக ஏக்நாத் கூறியிருந்தார். இவர்களுடன் சிவ சேனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிவ சேனா மூத்த தலைவரும்,  செய்தி தொடர்பாளரும்,   சஞ்சய் ராவத் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் ஆட்சியை இழக்கும் சூழ்நிலை வரலாம். ஆட்சியை இப்போது இழந்தாலும் மீண்டும் போதுமான பலத்துடன் ஆட்சியை அமைப்போம் என கூறியிருந்தார். இப்பேட்டி வெளியான சிறிது நேரத்திலேயே சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள், சட்டசபை கலைக்கப்படுவதை நோக்கி செல்கிறது என குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இது தொடர்பாக சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுவாக இத்தகைய அரசியல் குழப்பங்கள் ஏற்படும் போது மாநிலங்களில் சட்டசபை முடக்கப்படுவது அல்லது கலைக்கப்படுவது வழக்கம். எம்.எல்.ஏக்களை கடத்துவது; எம்.எல்.ஏக்களைக் கடத்திக் கொண்டு போய் வெளிமாநிலங்களில் அடைத்து வைப்பது என்பதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் இருந்து தப்பி வந்துள்ளார் எம்.எல்.ஏ. நிதின் தேஷ்முக். ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் அவரை தாக்கி மருத்துவமனையில் சேர்த்து ஊசி போட்டுள்ளனர். அவரைக் கொல்ல முயற்சி நடந்தது எனவும் நிதின் தேஷ்முக் கூறியிருக்கிறார் என்றார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )