மகாராஷ்டிராவில் 3-ஆவது முறையாக ஆட்சிக் கலைப்பு முயற்சியில் பாஜக!
மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் 13 எம்எல்ஏ-க்களை, பாஜக தன்பக்கம் இழுத்து விட்டதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே-வை சிவசேனா நீக்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 3-ஆவது முறை யாக ஆட்சிக்கலைப்பு முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியின் 13 எம்எல்ஏ-க்கள், சுயேட்சை எம்எல்ஏ-க்கள் என மொத்தம் 26 பேரை பாஜக தனக்கு ஆதர வாக வளைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களை குஜராத் மாநிலத்திற்கு அழைத்துச் சென்று சூரத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளது. மேலும் 11 எம்எல்ஏ-க்களை வளைப்பதன் மூலம் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கி ரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசை கலைத்து விடலாம் என்று கணக்குப் போட்டு வேலை யைத் துவங்கியுள்ளது.
CATEGORIES Uncategorized
TAGS தலைப்பு செய்திகள்