BREAKING NEWS

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்த அவலம்

தஞ்சையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்த அவலம்.

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் 1 மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்த அவலம் தஞ்சையில் நடந்தது.

திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது இதேபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 மணிவரை மனு வாங்க எந்த அதிகாரிகளும் வரவில்லை இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை நேரத்திலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொலை தூரத்தில் இருப்பதால் அதிகாலையிலேயே எழுந்து மக்கள் குறைகளை கூற வந்தால் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாக மக்கள் வேதனை தெரிவித்துச் சென்றனர் இதுகுறித்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க தொடங்கியதும் உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி சமாளித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )