மக்கள் தொடர்பு முகாமில் 108 பயனாளிகளுக்கு 38 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணம், மகளிர் சுய உதவி குழு வங்கி கடன் இலவச தையல் இயந்திரம் 108 பயனாளிகளுக்கு 38 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முன்னதாக இம் முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் காட்சிபடுத்தப்பட்டன பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் வகையில் கேழ்வரகு கம்பு சோளம் நவதானிய பயிர் வகைகளும் இக் கண்காட்சியில் இடம் பெற்றன இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினரும் பார்வையிட்டனர் இந்நிகழ்வில் கோட்டாட்சியர் மகாலட்சுமி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
