மடத்துக்குளம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திமுக அரசைக் கண்டித்து, அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து கோஷ்ங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட,ஒன்றிய, நிர்வாகிகள் உட்பட 7000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
