மணமக்களுக்கு திருமணப்பரிசாக தக்காளி !!
மணமக்களுக்கு திருமணப்பரிசாக தக்காளி !!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை சில்லறை கடைகளில் ரூ100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தக்காளி இல்லாமல் எந்த சுவையான உணவும் தயாரிக்க முடியாது. இந்திய உணவை பொறுத்தவரை குழம்பு , குருமா, கூட்டு வகைகளின் சுவைக்கு தக்காளி தேவை அவசியம். அத்துடன் ரசம், கூட்டு, தக்காளி சாதம் என சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி மயம் தான்.
இந்நிலையில், தக்காளியின் விலை தற்போது திடீரென அதிகரித்து கிலோ ரூ 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்துள்ளனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளர் அக்கீம் . இவருடைய மகள் அப்சானாவிற்கும், ஹாரீசுக்கும் திருமண நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.