BREAKING NEWS

மண்ணச்சநல்லூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை.

மண்ணச்சநல்லூரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மன உளைச்சலில் இருந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் திருமலை பாடி முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் இவருடைய மகன் 57 வயதான வைத்தியநாதன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

 

இவருடைய அண்ணன் ரமேஷ் என்பவர் சொத்து கேட்டு பிரச்சனை செய்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மண்ணச்சநல்லூரில் உள்ள இவரது சித்தப்பாவாண திருநாவுக்கரசு என்பரது வீட்டில் கடந்த 15 நாட்களாக தங்கி இருந்துள்ளார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த வைத்தியநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS