மண்ணையும் காணும்..! மரத்தையும்_காணும். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் துரை கற்பகராஜ் அராஜகம்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாட்டக் கரிசகுளம் பஞ்சாயத்து பகுதியில் உள்ளது ராம்நகர்.
இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சேத்தூர் பேரூராட்சியில் முன்னாள் தலைவருமான 93 வயதான தோழர் செல்லப்பிள்ளை வசித்து வருகிறார். அவரது மகள் திருமதி ரேணுகாதேவி மருத்துவராக உள்ளார் வீட்டின் அருகிலேயே கிளினிக் நடத்தி வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் திரு துரை கற்பகராஜ் ஜேசிபி வாகனத்தோடு வருகை தந்து பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேற வேண்டும் பாலத்தை உயர்த்தி வாருகால் அமைத்து தருவதாக கூறி வீட்டு வாசல் அருகே சுமார் 30 அடி நீளம் 3 அடி அகலம் 9 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டினார். வீட்டு வாசலில் இருந்த பழமையான வாகை மரத்தையும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றி விட்டனர்.
தோண்டப்பட்ட மண் முழுவதும் டிராக்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. மரத்தையும் தூக்கிச் சென்று விட்டனர். தோண்டி முடித்து வெளியேறும் போது ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் துரை கற்பகிராவிடம் டாக்டர் ரேணுகாதேவி மிகப் பள்ளமாகிவிட்டது.
நாங்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாதே விரைவாக வாறுகால் அமைத்து சரி பண்ணிக் கொடுங்கள் எனற தற்கு, நான் எல்லாம் சரி பண்ண முடியாது வேண்டுமென்றால் நீங்களே தண்ணீரை வெளியேற்றிவிட்டு சரி செய்து கொள்ளுங்கள் என்று மரியாதை இல்லாமல் பேசி சென்றார்.
இதுகுறித்து மறுநாளே ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து இப்பகுதியில் வாறுகால் அமைப்பதற்கு திட்டம் உள்ளதா பள்ளம் தோண்டினார்களே என கேட்டபோது, நாங்கள் எந்த வேலையையும் யாரையும் செய்யச் சொல்லவில்லை என ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கூறிவிட்டார்.
புகாரின் அடிப்படையில் நேரில் வந்து பார்வையிட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் பொறியாளர் எங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டது நாங்கள் விரைவில் வாருகால் அமைத்து தருகிறோம் எனக் கூறிவிட்டு சென்றனர்.
மூன்று மாதம் ஆகியும் இன்னும் பணிகள் ஏதும் துவங்கவில்லை. ஊராட்சி ஒன்றிய ஆணையாளிடம் இன்று மறுபடியும் சந்தித்து கேட்டபோது இப்பணியை பார்ப்பதற்கான பரிந்துரை செய்திருக்கிறோம் ஒப்புதல் கிடைத்தவுடன் பணியே துவங்கிவிடுவோம் என்று கூறியுள்ளார்.
எவ்வித அனுமதியும் பெறாமல் வீட்டு வாசலில் பள்ளம் தோண்டியும் மரத்தை அனுமதி இல்லாமல் அகற்றிய ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மீது அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?