BREAKING NEWS

மதவாத சக்திகள் வயிற்று எரிச்சல் அடைய வேண்டும் என்பதால் கட்டிட பூஜைகளில் கலந்து கொள்கிறேன் என கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

மதவாத சக்திகள் வயிற்று எரிச்சல் அடைய வேண்டும்  என்பதால் கட்டிட பூஜைகளில் கலந்து கொள்கிறேன்  என கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது;-

கும்பகோணத்தில் கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் கட்டிட ஐம்பொன் செங்கலை என்னிடத்தில் கொடுத்து அதற்கு உண்டான பூஜைகளை செய்தனர். மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. இதைப் பார்த்து
மதவாத சக்திகள் வயிறு எறிவார்கள். அதற்காகவே அமைதியாக பூஜைகளில் கலந்து கொண்டேன்.

எனக்கும் செங்கலுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை.

திமுகவின் நிகழ்ச்சிகளில் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என அறிவித்து இருந்த நிலையில் அதற்கு முன்பே அனைத்து மூத்த உறுப்பினர்களுக்கு ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி கூறிய ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேலவை உறுப்பினர்கள் எஸ் கல்யாணசுந்தரம், சண்முகம் எம்எல்ஏக்கள் அன்பழகன் துரை சந்திரசேகரன், துணை மேயர் சுப தமிழழகன், ஒன்றிய செயலாளர் அசோக் குமார்,கணேசன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )