மதுராந்தகம் அருகே மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து விபத்து.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.,
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெல்வாய் பாளையம் கிராமத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்ததையொட்டி அந்த பகுதியை சுற்றி பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் நேற்றைய முன்தினம் முதலே மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்தது.
இன்று மின்சாரம் வந்தவுடன் அந்த கிராமத்தில் வசிக்கும் முனுசாமி செல்லம்மாள் தம்பதியினர் வீட்டில் டிவி பார்ப்பதற்காக சுவிட்ச் போட்டபோது எதிர்பாராத விதமாக டிவி வெடித்து மின்கசிவு ஏற்ப்பட்டு மல மலவென குடிசை வீடு தீ பற்றி எரிய தொடக்கியது.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அந்த ஓலைகளை பிரித்து எறிந்து விட்டு உடனே தண்ணீர் ஊற்றி அந்த தீயை அனைத்தனர். இதனால் மற்ற வீடுகளுக்கு தீ பறவாமல் பாதுகாக்கப்பட்டது. அக்கம்பத்தினர் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் ஏதுமின்றி அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.