BREAKING NEWS

மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியில் சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியில் சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியில் சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற கண்டைனர் லாரி நக்கம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்பக்க சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. ஆனால் சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர் லாரியை 100மீட்டர் மேம்பாலத்தில் இருந்து இயக்கி வந்து பாலத்தின் இறுதியில் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு அவசர எண்ணில் அழைப்பு விடுத்ததை அடுத்து நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி லாரி முழுவதும் பரவ விடாமல் தடுத்தனர் இதனை அடுத்து முழுவதுமாக தீயை அணைத்த பின்னர் லாரியில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் வேர் வாகனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சாதுரியமாக ஓட்டுனர் செயல்பட்டதால் அவர் உயிர்பிழைத்த தோடு லாரி முழுவதும் எரிந்து தீப்பிடிக்கும் நிலை கட்டுப்படுத்தப்பட்டது. விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )