மதுரையில் மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு போட்டி.

மதுரையில் தேசிய அளவிலான மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு மற்றும் ரேசிங் போட்டிகள் துவக்கவிழா சேது பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவிலான வாகன வடிவமைப்பு மற்றும் ரேசிங் போட்டிகள் ஜூலை 27ஆம் தேதி துவங்கப்பட்டு 31ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது .துவக்க விழாவில் கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ் .முகமது ஜலில் தலைமை தாங்கினார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ் .எம் சீனி முகைதீன், எஸ். எம் சீனி முகமது அலி யார் ,எஸ்.எம். நிலோபர் பாத்திமா எஸ் .எம் .நாசியா பாத்திமா முன்னிலை வகுத்தனர் .கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக வாடிப்பட்டி நிறுவனத்தின் பொது மேலாளர் ராகவன் மற்றும் இட்ஸ் மீ நிறுவனத்தின் நிகழ்ச்சி மேலாளர் உமேஷ் கலந்து கொண்டனர். இயந்திரவியல் துறை தலைவர் முத்துசாமி அவர்கள் நன்றி உரை வழங்கினார். இதில் தேசிய அளவில் பஞ்சாப் ,மகாராஷ்டிரா தெலுங்கானா, மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இருந்து மெக்கானிக்கல் துறை சார்பாக 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். .போட்டிகளில் எவ்வாறு வாகனம் வடிவமைக்கப்பட்டது மற்றும் ஆஃப் ரோடு ரேசிங் முறைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் அமிர்தராஜ், நாகராஜ் ,ஆனந்த் நாகராஜ் ,பாலாஜி மற்றும் துறை மாணவர்கள் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.