மதுரை அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம், அடைக்கப்பட்டார் அறக்கட்டளை, திருச்சி வெல்டிங் குவாலிட்டி கான்செப்ட,தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம், அடைக்கப்பட்டார் அறக்கட்டளை, திருச்சி வெல்டிங் குவாலிட்டி கான்செப்ட,தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினார்கள்.
முகாமில் முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி ,பூதலூர் ஒன்றிய குழு தலைவர் செல்லக்கண்ணு, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல்அ லுவலர்நெடுஞ்செழியன்,பேரூராட்சி துணைத்தலைவர்ரமணி, அடைக்கப்பட்டார் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன்,
திருக்காட்டுப்பள்ளிபோலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, திருக்காட்டுப்பள்ளி அக்னிஸ்வரர் லயன்ஸ் சங்க தலைவர் பழனியப்பன,செயலாளர் ஜெயக்குமார் ,பொருளாளர் சுப்புராமசாமி,திருச்சி வெல்டிங் குவாலிட்டி கான்செப்ட் நிர்வாகிகள் வேலூ் ராமதாஸ் ,மகாதேவன் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.முகாமில் 427பேர் சிகிச்சை பெற்றனர். 154பேர் கண் அறுவை சிகிச்சை பெற அழைத்து செல்லப்பட்டனர். செய்தியாளர்: விஜயகுமார்.
