BREAKING NEWS

மதுரை ஆதீனத்திற்கு இவ்வளவுதான் மரியாதை .. சு.ப வீயையே கோவப்படுத்திய அந்த ஒன்றை வார்த்தை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வசனத்தை அறிஞர் அண்ணா திருமூலத்திலிருந்து திருடியதாக மதுரை ஆதீனம் பேசியிருப்பது அபத்தம் என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கண்டித்துள்ளதுடன் மதுரை ஆதீனத்திற்கு இவ்வளவு தான் மரியாதை என்றும், இனி அண்ணாவை சீண்டினால் எதிர்வளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வசனத்தை அறிஞர் அண்ணா திருமூலத்திலிருந்து திருடியதாக மதுரை ஆதீனம் பேசியிருப்பது அபத்தம் என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கண்டித்துள்ளதுடன் மதுரை ஆதீனத்திற்கு இவ்வளவு தான் மரியாதை என்றும், இனி அண்ணாவை சீண்டினால் எதிர்வளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதன் அரசியல் நடவடிக்கைகளை பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. அதே நேரத்தில் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிகர் ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி தொடர்ந்து தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை விமர்சித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதுரை பழங்காநத்தத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட துறவியர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் கோவில்களை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு ஆதீனங்கள், மடாதிபதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார்கள், அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவில்களில் என்ன வேலை, இந்து மதத்தை காப்பாற்ற இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அனைத்து மடாதிபதிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அரசியல்வாதிகளே கோவில்களில் தக்கார்களாக உள்ளனர்.

கோவில்களுக்குள்ளும் அரசியல் புகுந்து விட்டது. கொள்ளைக்கார கூட்டமாக மாறிவிட்டது. மக்கள் உண்டியலில் காசு போடாதீர்கள் என பேசியிருந்தார். அதேபோல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலத் திருமந்திரம் இந்த வார்த்தையை அண்ணா சொன்னதாக சொல்கிறார்கள் போகட்டும் என கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரியாரியவாதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் இதற்காக மதுரை ஆதீனத்தை கடுமையாக எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- மதுரை பழங்காநத்தத்தில் நடந்த துறவியர் மாநாட்டில் மதுரை ஆதீனம் மிக கடுமையாக அண்ணாவையும் திராவிட இயக்கத்தையும் விமர்சித்து பேசியிருக்கிறார். துறவியர் மாநாடு என்றால் அன்பும் அருளும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றுதான் கூறுவார்கள், ஆனால் அவர்கள் பேச்சு முழுக்க முழுக்க திராவிட இயக்கத்திற்கு எதிரான வெறுப்பு அரசியல் பரப்பப்படுகிறது.

 

அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை பார்த்து வெறுப்பில் விமர்சிக்கின்றனர், வெறுப்பு வார்த்தைகள் நாமெல்லாம் உயிராக போற்றுகிற நமது அண்ணாவுக்கு எதிராகவும் வந்துள்ளது. அண்ணாவையே இழிவாகப் பேசுகிறார் மதுரை ஆதீனம், இதன் மூலம் திட்டமிட்டு நாடெங்கும் மதக்கலவரத்தை விதைக்கிறார்கள். எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என பூணூல் போட்டவர்கள் பேசினால் பச்சையாக தெரிந்துவிடும் என்பதனால் பூணூல் போடாத மதுரை ஆதீனம் போன்ற சாமியார்களை வரவழைத்து பேசுகிறார்கள். பேரறிஞர் அண்ணாவை குறிப்பிட்டு மதுரை ஆதீனம் பேசும்போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் திருமந்திரம், ஆனால் அதை அண்ணா திருடிக்கொண்டு போய் விட்டார் என்பது போல ஆதீனம் பேசுகிறார், அண்ணாவின் பரந்துபட்ட படிப்பு பற்றி மதுரை ஆதீனத்திற்கு தெரியுமா? அவருடைய அறிவுக்கு முன்னால் உங்களுடைய அறிவு துளியளவாவது ஈடாகுமா? அவர் உண்மையிலேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்தவர். அவர் பேசும் போது அத்தனை மேற்கோள்கள் வந்தி விழும், ஆனால் அவர் பேசுவதற்கு எல்லாம் நீங்கள் அண்ணா திருடி விட்டார் என்று சொல்வதற்கு இங்கு எந்த கொம்பனுக்கும் உரிமை இல்லை.

 

அவ்வளவுதான் மதுரை ஆதீனத்திற்கு எல்லை, இனியும் தொடர்ந்து பேசினால் திமுகவில் இருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்கள் மட்டுமல்ல அண்ணா திமுகவில் இருக்கிற இளைஞர்களும் உங்களை எதிர்ப்பார்கள். கிருபானந்த வாரியாருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அவர் மிகப்பெரிய தமிழ்கடல், அவர் அண்ணாவை எதிர்த்தபோது அவரின் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும், மதுரை அதிகம் பேசும் போது அன்புத்தம்பி சீமான் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார் என பேசுகிறார். நீங்கள் பேசுங்கள் அது என்ன அன்புத்தம்பி சீமான், நீங்கள் எல்லோரும் ஒரே கூட்டம் தான் என்று எங்களுக்கு தெரியும். அரசியல் பேசுங்கள், தெருவுக்கு பாரதிய ஜனதாவின் கொடியை தூக்கிக் கொண்டு வாருங்கள், நீங்கள் வாருங்கள் நாங்கள் உங்களை பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )