மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மக்கள் தொழிலாளர் சங்கம் ஆகியன இணைந்து மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து வக்கீல் பிரிவு மாநில தலைவர் அருள்தாஸ், மாநில தலைவர் மாரிமுத்து, ஆகியோர் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.

மாநில அமைப்பாளர் அப்பாஸ், மந்திரி மாநில செயலாளர் வெங்கடேஷ், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றி
னார்கள். மாநில பொதுச்செயலாளர் ரபிக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் பெட்ரோல் -டீசல் -சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த கோரியும், மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும் சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாநில இணைச்செயலாளர் சுந்தரமூர்த்தி மாநில அமைப்புச் செயலாளர் ராஜாராமன் ,தஞ்சை மாவட்ட தலைவர் ஜாபர் சாதிக் ,மாநில அமைப்புச் செயலாளர் இஸ்மாயில், மாநில துணை செயலாளர் ஜான், மாநில தலைவர் ஜீவா மணிமாறன், மாநிலத் துணைச் செயலாளர் ரமேஷ் ,நாகை மாவட்ட செயலாளர் ஜெயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.தஞ்சை மாநகர செயலாளர் ஷேக் இப்ராகிம் நன்றியுரையாற்றினார்.
