மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து; மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
![மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து; மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம். மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து; மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/IMG-20221109-WA0243.jpg)
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒரே மொழி ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது தமிழகம்,உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டியதோடு,..
இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக கட்சியினர் கண்டனம் தெரிவித்து மானாமதுரை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாசிலைவரை துண்டு பிரசுரம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணியும் – மாணவர் அணியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் மானாமதுரை நகரச் செயலாளர் பொன்னுச்சாமி , மானாமதுரை திமுக நகர பொருளாளர் மயில்வாகனன் மானாமதுரை ஊராட்சி பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை,மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை.
ஒன்றிய குழுத் துணைத் தலைவர் முத்துசாமி, நகர் கழக துணைச் செயலாளர் மன்னர்மன்னன், நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட , திமுக மானாமதுரை வட்ட பிரதிநிதி சிவராமன்,5வது வார்டு வட்ட கழக செயலாளர் பாலா, கழக மூத்த நிர்வாகிகள், கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி அமைப்பினர், பல்வேறு அணி, அமைப்பாளர்களும் மானாமதுரை வார்டு கவுன்சிலர், 18, வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி இராஜேந்திரன்,.
19,வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சங்கிலி 20 வது வார்டு கவுன்சிலர் சத்தியா தர்மா 21, வார்டு கவுன்சிலர் ரா.செல்வகுமார் 23,வார்டு கவுன்சிலர் சித்ரா மன்னார் மன்னன், 16 வது வார்டு கவுன்சிலர் காளீஸ்வரி அழகுசுந்தரம், மானாமதுரை நகர இளைஞரணி துணைஅமைப்பாளர் கா.ராஜேஸ்,மானாமதுரை நகர மாணவரணி,கார்த்திக் மற்றும் நகர கழக தொழில்நுட்ப அணி சதீஷ்குமார் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் நடைபயணமாக துண்டு பிரச்சாரத்தை நடத்தி முடித்தனர்
கழக உடன்பிறப்புகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.